என் சொல்லில்...

அவ்வப்போது தோன்றிய எண்ணங்களின் வெளிப்பாடுகள், எழுத்துக்கள் வாயிலாக.

அவளும் நிலவும்

விரிந்த நீள மேடையில் மிதக்கும் வட்ட தேவதையே ! மெச்சிக்கும் உன் அழகுக்கு என்னவளும் நிகரில்லை ஆதலால் உன் அழகுக்கு அழகு சேர்க்க அவளின் கரம் - பிடித்து உம்முள் குடிபெயர்க்க ஆசையே! இடம் கொடுப்பாயா மதியே!

ஆனந்தப்பரவசம்

உன் மார்பில் என் முகத்தை புதைத்து உன் வாசம் என் சுவாசத்தில் கலந்து காதலில் திளைத்து விழிகளை மூடும் போது வரும் மன நிறைவை வருணிக்க எந்தச் சொல்லாலும் இயலாது என் அன்பே!!!

கதைப்போமா

சிலிர்க்கும் இரவின் மடியில் பொழியும் பனியின் உடையில் ஆழ்ந்த நிசப்தத்தின் பின்னணியில் வருடும் காற்றின் இசையில் உன் தோள் சாய்ந்து முத்தக் கம்பளம் போற்றி நாம் கதைக்கும் தருணம் எப்போது?

காதல் இது தானே

முதலில் நீ யார் என்றே தெரியவில்லை தெரிந்து கொண்டேன் ...! புரிந்து கொண்டேன்...! முடிவில் நான் யார் என்றே மறந்துபோனேன் மூழ்கிப்போனேன்! அறிந்துகொண்டேன்...!

என்றென்றும்

இப்பிறவி போதுமா...? இதுவரை நடந்த நிகழ்வுகளையும் இனி நடக்கவிருக்கும் நிஜங்களையும் உன்னிடம் பகிர்வதற்கு ஆயிரம் ஆயிரம் ஆசைகளையும் லட்சம் லட்சம் கனவுகளையும் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறேனடா அவை அனைத்தையும் உன்னோடு சேர்ந்து கலந்து சுகமான நினைவுகளாக மெருகேற்ற உன்னை சந்திக்க இருக்கும் நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறேனடா..!

மாயை

காதலின் முழு ஆழத்தை உணர்ந்ததால்தான் காதலில் கால் வைக்காமல் இருக்கிறேன் காதலிக்க தெரியாமல் இல்லை.

காதல் ஒளி

சூரியனிடம் இருந்து பெறும் ஒளியை வைத்து காரிருளை அகற்றும் நிலவைப் போல் உன்னிடம் இருந்து பெறும் காதலை வைத்து இப்பிரவேசத்தையே உனக்கானதாக மாற்றுவேன்!

உன் வரவை எதிர்பார்த்து

என் கனவுகளை நினைவாக்க இருக்கும் கண்ணாளனே! ஒரே மாலையில் என்னை ஆட்கொள்ள இருக்கும் மணவாளனே! என் இதயத்தை திருட இருக்கும் கள்வனே! நான் என் வாழ்க்கையை உன்னோடு பகிரப்போவது எப்போது? எவ்வாறு? என்ற வினாக்களுக்கு நீ என்று விடையளிக்க வரப் போகிறாய்???

ஏக்கம்

உன் மடியை நான் ஊஞ்சலாக மாற்றி ஆடுவது எப்போது ? உன் ஒரு பார்வையில் என் வாழ்க்கையே முழுமையடைந்ததாக உணர்வது எப்போது ? உன் கைகள் என்னை காற்றாய் வருட இருப்பது எப்போது? உன் தோளில் சாயும் போது என் தாயின் கருவறையில் இருக்கும் பாதுகாப்பை உணர்வது எப்போது? உன் அன்புச் செயல்களால் என் ஏழேழு பிறவிகளுக்கும் நீயே என் எல்லாவுமானவனாய் இருக்க வேண்டும் என்று எண்ணுவது எப்போதோ??

தேடல்

என் முக ஜாடைகளை உணர்ந்து என் தேவைகளை பூர்த்தி செய்ய இருப்பவனே! உணர்ச்சிகளை மதித்து அதை ஏற்று நடக்க இருப்பவனே! நான் செய்யும் குறும்பு சேட்டைகளை ரசிக்கம் இருப்பவனே! என் வாழ்க்கையின் ஒரு அங்கமாய்மாற இருப்பவனே! உன்னை பற்றி நினைத்தாலே என் இதழ் மேல் புன்னகை தவழ்கிறது! எனக்கானவனே! நீ எங்கு எங்கு இருக்கிறாய் ?

அதீத அன்பு

யாரும் உன் மீது வைத்திடாத அன்பை நான் வைத்தேன்... காதலாக!

இணைபிரியாமல்

வாயுக்களால் உருவான காற்றை போல் உன்னால் உருவான நான் என்றும் உன் சுவாசத்தோட கலந்திருப்பேன்!

போராட்டம்

வாழ்க்கை என்ற வட்டப் புதிரில் சிக்கிக்கொண்டு வாழ்வதா! வீழ்வதா! எனப் போராடிக் கொண்டிருப்பவன் மனிதன்.